கோவை: கோவை வெள்ளலூர் கஞ்சிக்கோணாம் பாளையத்தில் இளங்காளைகள் கிராமிய கலைக்குழு கடந்த 60 வருடமாக இயங்கி வருகிறது. இதில் ஆசிரியர்கள் செலகாரசல் வெள்ளிங்கிரி,மனோகரன் சதிஷ்குமார் தினேஷ், சக்திவேல்,சிவா,விஜயன், அய்யாசாமி ரகுபதி கமல்,கோபால் மணிகண்டன் பம்பை தண்டபாணி. அசோக்,தவில் கண்ணதாசன் ஆகியோர் ஆசிரியர்களாக கட்டணம் இல்லாமல் கலை கற்பித்து வருகின்றனர். வள்ளிகும்மி, பறை, சிலம்பம் ஒயிலாட்டம் காவடி போன்ற கலைகள் கற்பித்தும் விழாக்களுக்கும் கட்டணம் இல்லாமல் கலை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோயம்புத்தூர் சிடிசன் பாரம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை வரவேற்கும் விதமாக இளங்காளைகள் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.