ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து மேற்கொண்டனர். இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பவானிசாகரில் சாமிநாதன்(37), கடத்தூரில் செல்வம் (57), சதீஷ் என்ற சுரேஷ் (40) கோபியில் குணசேகரன் (36) ஆகிய 4 பேரை கைது செய்து 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அரசு அனுமதியின்றி ஓட்டலில் மது அருந்த அனுமதித்ததாக பெருந்துறையில் பிரவீன்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.