ஈரோடு,மே5: அந்தியூர் அடுத்துள்ள ஆதிரெட்டியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் மது விற்பனையில் ஈடுபட்ட அந்தியூர், பட்லூர், கெம்மியம்பட்டியை சேர்ந்த செல்வன் (51) என்பவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல கவுந்தப்பாடியில் நடத்தப்பட்ட சோதனையில், பெருந்துறை, பாண்டியம்பாளையம், சத்யாபுரத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கார்த்திக் (28), தாளவாடியில் கர்நாடக மாநில மதுபானங்களை விற்பனை செய்த என்.உடையம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (47), கடம்பூர் மல்லப்பா மகன் சந்திரசேகர் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.