போடி, ஆக. 18: போடியில் உள்ள வஞ்சி ஓடை பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக இன்ஸ்பெக்டர் அசோக்கிற்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவரது தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிச்சைமணி (48), தேவராஜ் (46) என்பவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.