கெங்கவல்லி, ஜூலை 6: கெங்கவல்லி பகுதியில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாக ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி எஸ்ஐ தினேஷ்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, நடுவலூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வெங்கடேசன்(50), சாத்தப்பாடி ஊராட்சி மடத்தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி(50) ஆகியோர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மது விற்ற இருவர் கைது
0