அவிநாசி, ஆக.22: அவிநாசி அருகே சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவிநாசி போலீசார் கருவலூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முள்ளுக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் கருவலூரை சேர்ந்த பாலாஜி (36) என்பதும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர் மீது அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.