வருசநாடு, செப். 7: வருசநாடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை அதிகரித்து வருவதாக நகர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து வருசநாடு போலீசார் அப்பகுதியில் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வருசநாடு அருகே உள்ள பவள நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனையிட்டபோது, விற்பனைக்காக மதுப்பாட்டில்களை பதுக்க வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த மாயி (48) என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 80 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.