திருப்பூர், ஆக.18: திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் புஷ்பா ரவுண்டானா சந்திப்பு எப்போதும் பரபரப்பாக காணப்படும். இப்பகுதிக்கு நேற்று மாலை மதுபோதையில் வந்த வாலிபர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இந்த தாக்குதலில் 2 பேருக்கு காயமடைந்தனர். அருகில், அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.