ஊத்தங்கரை, ஜூன் 16: ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிலர் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, ஊத்தங்கரை எஸ்.ஐ.மோகன் மற்றும் போலீசார் ஒட்டம்பட்டி, தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (60) என்பவர், மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது பதுக்கி விற்றவர் கைது
0
previous post