ஊத்தங்கரை, அக்.17: ஊத்தங்கரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்களை கைது செய்தனர். அதன்படி சிவமணி(42), பெருமா(60), சக்தி(42), கல்லாவி பகுதியில் சங்கர்(44), மாதேஸ்(37), சிங்காரப்பேட்டையில் சிங்காரவேல்(40), கோபி(32) மற்றும் சாமல்பட்டியில் 2 பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊத்தங்கரை அடுத்த நார்சாம்பட்டி பகுதியில் சிங்காரப்பேட்டை போலீசார் ரோந்து சென்ற போது, அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பின்புறத்தில் சூதாடிக்கொண்டிருந்த அன்பு(53), வெங்கட்ராமன்(35), சூர்யா(25), தமிழ்செல்வன்(25) ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.