திண்டுக்கல், ஆக. 25: திண்டுக்கல் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் எஸ்எஸ்ஐக்கள் முருகானந்தம் விருவீடு போலீஸ் நிலையத்திற்கும் பழனிவேல், சுந்தரம் ஆயக்குடிக்கும், மாரீஸ்வரன் சத்திரப்பட்டிக்கும், ஏட்டுக்கள் சேகர், வனராஜன் திண்டுக்கல் தாலுகாவிற்கும், மணிகண்டன் விளாம்பட்டிக்கும், பிரகாஷ், சீனிவாச பெருமாள் திண்டுக்கல் நகர் தெற்கிற்கும், முகமது அஜிஸ்கான் கொடைக்கானலுக்கும், சுரேஷ் கண்ணன் திண்டுக்கல் நகர் வடக்கிற்கும், ஞானவேல் கன்னிவாடிக்கும், சக்திவேல் சாமிநாதபுரத்திற்கும், வேந்தநேயன் பழநி தாலுகாவிற்கும், சரவணகுமார், தண்டபாணி, பழநி அடிவாரத்திற்கும், ரமேஷ் குமார் ரெட்டியார்சத்திரத்திற்கும், ராமதுரை பழநி நகருக்கும், சிவன் ஆயக்குடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் பிறப்பித்துள்ளார்.