மதுரை, ஜூலை 3: மதுரை திண்டுக்கல் ரோட்டில் விளாங்குடியில் துவங்கி பரவை வரை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் நேற்று நகரமைப்பு ஊழியர்கள் விளாங்குடியில் இருந்து பரவை வரை ரோட்டோரத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை முழுவேகத்தில் அகற்றி அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு காரணமாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
மதுரை விளாங்குடி டூ பரவை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
52