மதுரை, ஆக. 26: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்திடும் பொருட்டு நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தை கூடுதல் பதிவாளர் நிதி மற்றும் வங்கியியல் மரு.ந.வில்வசேகரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இக்கூட்டத்தில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்- செயலாட்சியர் மரு.அ.ஜீவா மற்றும் மதுரை, தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கூடுதல் பதிவாளர் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை இயந்திரத்திற்கான ரூ.27,73,826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கினார்.