Saturday, September 21, 2024
Home » மதுரை மாவட்டத்தில் 4 சத்துணவு கூடங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

மதுரை மாவட்டத்தில் 4 சத்துணவு கூடங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

by Ranjith

மதுரை, ஆக. 20: கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் சத்துணவு கூடங்களை மேம்படுத்திடவும், சுகாதாரமான உணவை மாணவர்களுக்கு வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதல் கட்டமாக 100 பள்ளிகளில் உள்ள சத்துணவு சமையலறைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட குவெஸ்ட் சான்றிதழ் என்ற நிறுவன தணிக்கை குழுவினர், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் 4 பள்ளிகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கியுள்ளனர்.

இதன்படி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் மாயாண்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, அரும்பனூர் புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மதுரை கோரிப்பாளையம் மற்றும் சுப்பிரமணியபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளன. இதன்படி கலெக்டர் சங்கீதா மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் சத்துணவு மைய அமைப்பாளர்களிடம் ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குவெஸ்ட் சான்றிதழ் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மதுரை மற்றும் பள்ளிகளின் சத்துணவு அமைப்பாளர்கள் கருப்பாயி, முனீராபானு, இந்திரா மற்றும் ராமலெட்சுமி (பொ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

11 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi