மதுரை, ஆக. 17: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில், சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் பங்கேற்றார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேயர் இந்திராணி பொன்வசந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கமிஷனர் தினேஷ் குமார், புதூர் பூமிநாதன் எம்எல்ஏ, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசுகையில், ‘‘மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளில் பொறியியல் மற்றும் சுகாதாரப் பிரிவுகளில் உள்ள முன்களப்பணியாளர்கள் வெகுசிறப்பாக பணியாற்றுகின்றனர்.
அவர்களை வணங்குகிறேன்’’ என்றார். இவ்விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா விமல், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நலஅலுவலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.