மதுரை, பிப். 28: மதுரை விஷால் டி மால் மற்றும் மேலமாசி வீதியில் உள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அரங்கில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சு.வெங்கடேசன் எம்.பி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள 42 அரசு பள்ளிகளில் பயிலும் 301 மாணவிகளின் நலன், கல்வி வளர்ச்சிக்காக, மலபார் குழுமம் சார்பாக ரூ.24.70 லட்சம் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர் சுதிர் முகமது, மதுரை விஷால் டி மால் கிளை தலைவர் நிஷாந்த், மேலமாசி வீதி கிளை தலைவர் சிஹாபுதீன் ஆகியோர் பங்கேற்றனர். மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு, அதன் சமூகப்பொறுப்பு முயற்சிகள் முக்கிய காரணமாக உள்ளது. இதன்படி இந்நிறுவனம் தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் உள்ளிட்ட சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.