மதுரை, ஆக். 16: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக காய்கறிகளின் விலை ஏற்றத்தாழ்வின்று இருந்து வந்தது. பீட்ருட், முள்ளங்கி, மொச்சை ஆகியவை அதே விலையில் நீடிக்கின்றன. கத்தரிக்காய், பட்டை அவரக்காய் ஆகியவற்றின் விலை கூடியிருக்கிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் கடந்த மாதம் ரூ.30க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.60 ஆக, இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது.
தேனி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் தற்போது பெய்த மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. மதுரை மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி விலைப்பட்டியல் வருமாறு: (கிலோவிற்கு) சின்ன வெங்காயம்-ரூ.75, பெரிய வெங்காயம்-ரூ.25, சுரைக்காய்-ரூ.20, கருவேப்பிலை ஒரு கட்டு-ரூ.30, புதினா ஒரு கட்டு-ரூ.20, மல்லி -ரூ.50, இஞ்சி-ரூ.120, மிளகாய்-ரூ.30, பாகற்காய் பெரியது-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.250,
சீனியாவரக்காய்-ரூ.25, மாங்காய்-ரூ.60, முருங்கைபீன்ஸ்-ரூ.80, நைஸ்அவரை-ரூ.60, முருங்கைக்காய்-ரூ.80, கேரட்ரூ20, சவ்சவ்-ரூ.25, குடை மிளகாய்-ரூ.70, பீட்ருட்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, மொச்சை-ரூ.50, டர்னிப்-ரூ.40, நூக்கல்-ரூ.40, சேனை-ரூ.50, சேம்பு-ரூ.70, கருணை-ரூ.40, உருளை-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.30, கோவக்காய்-ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை காலத்தையொட்டி வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.