மதுரை, மே 25: தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் பணிபுரியும் 16 உதவி ஜெயிலர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்த 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாற்றாக குழித்துறையில் பணியில் இருந்த பி.சுதாகர், உளுந்தூர்பேட்டையில் இருந்து சி.சதீஷ், குடியாத்தத்தில் இருந்த எம்.கே.சரவணன், வேலூர் சிறையில் இருந்த எஸ்.செந்தில்குமார் ஆகியோர், மதுரை மத்திய சிறைக்கு உதவி ெஜயிலர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் விரைவில் பொறுப்பேற்பர் என, சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.