மதுரை, அக். 31: மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.10க்கு பால் பாக்கெட் நாளை முதல் அறிமுகப்படுத்தப்படள்ளது என பொது மேலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: மதுரை ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாளை நவ.1ம் தேதி முதல் ரூ.10க்கு 200 மில்லி பால் மற்றும் 145 மில்லி தயிர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வியாபாரிகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், வணிக நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டீ மேட் பால் 500 மில்லி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளும் ஆவின் பாலினை வாங்கி பயன் பெற வேண்டும். இதுதவிர வருகின்ற பண்டிகை காலங்களில் ஆவின் நெய், பால்கோவா, மைசூர்பாகு, மில்க் கேக், காஜுகட்லி, பிஸ்தாரோல், நெய்அல்வா, நெய்லட்டு, மோதிபாக், மிக்சர் ஆகிய இனிப்பு கார வகைகளை வாங்கி பரிசளித்து மகிழலாம். மேலும் விபரங்களுக்கு 94896-19005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரவித்துள்ளார்.