மதுரை, நவ. 21: மதுரை ஆனையூர் இமயம் நகரை சேர்ந்தவர் ரெஜினா (30). இவரது, வீட்டின் உரிமையாளர் காளிதாஸ். கடந்த 2 மாதங்களாக ரெஜினாவிடம், வீட்டை காலி செய்ய கோரி காளிதாஸ் பிரச்னை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த நவ.9ம் தேதி ரெஜினா தனது தாயாார் வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் திருடப்பட்டிருந்ததுடன், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டூவீலரும் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரெஜினா அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வீட்டின் உரிமையாளர் காளிதாஸ், அவரது மகன் ராஜேஷ், மகள் தேவி, வீட்டின் பாதுகாப்பாளரான ஜெயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.