மதுரை, ஜூன் 6: மதுரை விடுதியில் தங்கியிருந்த 3 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பைபாஸ் ரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விடுதி செயல்பட்டு வருகிறது. இதனை வார்டன் ஜெனிகிரேஸ்(40) என்பவர் கவனித்து வருகிறார். இந்த விடுதியில் 14 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அனுஷ்யா(24), ஒய்.புதுப்பட்டி கோட்டைமேடை சேர்ந்த மாலா(18) மற்றும் செல்லூரை சேர்ந்த ப்ரீத்தி(19) ஆகியோர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று விடுதியில் இருந்த அவர்களை, அகர்பத்தி பேக்கிங் செய்யும் பணியை மேற்கொள்வதற்காக வார்டன் ஜெனிதா அழைத்தார். அப்ேபாது ஜெனிகிரேஸ் உள்ளிட்ட மூவரும் விடுதியில் இருந்து மாயமானது தெரிவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வார்டன் பல்வேறு இடங்களிலும் அவர்களை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்எஸ்காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 இளம்பெண்களையும் தேடி வருகின்றனர்.