மதுரை, மே 27: மதுரையில் வருகிற ஜூன் 1ம் தேதி திமுக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில் பொதுக்குழுவிற்கான பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து நடைபெறும் பணிகளை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திமுக மாநில இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த ஆய்வின்போது மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியன், சோமசுந்தரபாண்டியன், கரு.தியாகராஜன், ஜி.பி.ராஜா, மூவேந்திரன், அழகு பாண்டி, சம்மட்டிபுரம் கணேசன், அக்ரி கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள், திமுகவினர் உடனிருந்தனர்.