மதுரை, செப். 22: மதுரையில் கஞ்சா பறிமுதல் வழக்கில் இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உசிலம்பட்டி அருகேயுள்ள அம்மமுத்தன்பட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் (43), தந்திரன் (41). இவர்கள் கடந்த 4.5.2021ல் உசிலம்பட்டி- எழுமலை ரோட்டில் ரெங்கசாமிபட்டி பஸ் நிறுத்தம் அருகே 21 கிலோ கஞ்சாவுடன் எழுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.விஜயபாண்டியன்ஆஐரானார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.