வில்லிபுத்தூர், மே 31: தமிழ்நாடு இல்லத்து பிள்ளைமார் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தின் பாதுகாவலரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியுமான மதுரையின் முதல் மேயர் முத்துப்பிள்ளையின் திருஉருவ வெண்கல சிலை திறப்பு விழா மதுரையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மதுரை முன்னாள் மேயர் முத்துவின் திருஉருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இல்லத்துப் பிள்ளைமார் மாநில சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துப்பிள்ளை மகனும் பாரிஸ்டர் பட்டம் பெற்ற கருணாநிதி முத்து செய்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையில் இல்லத்து பிள்ளைமார் சமுதாய சொந்தங்கள் அனைவரும் ஒற்றுமையுடன், அமைதியுடன் கலந்து கொள்ள வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.