மதுரை, ஆக. 21 : மதுரை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும். காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாநில செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.