மதுராந்தகம், ஜூன் 5: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சரவணன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழு சோதனை ஈடுபட்டது. மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் கோபாலகண்ணன். மதுராந்தகம் ஊராட்சியில் அடங்கிய வையாவூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஊராட்சியில், ஊராட்சிகள் சட்ட பிரிவின் கீழ் வரவு செலவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகண்ணன் கணக்கினை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
0