மதுராந்தகம்:சென்னையிலிருந்து திருச்சி நோக்கி நேற்று அதிகாலை 40 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் அருகே பேருந்து வரும்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இரண்டு பயணிகள் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வேறு ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.