மதுராந்தகம், ஆக.12: செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாநில பொறியாளர் அணி அன்புச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், விசி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்தநாள், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாள், பஞ்சமி நிலம் மீட்பு போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை நினைவு நாள், மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து மாவட்ட செயலாளர் பொன்னிவளவன், கட்சியினர் இடையே கலந்து ஆலோசித்து பேசினார். இந்நிகழ்ச்சியில், விசிக வழக்கறிஞர் ராஜபாரதி, நிர்வாகிகள் பொய்யாமொழி, அம்பேத்கர் பித்தன், சம்பத், ஈழதமிழரசன், சிறுத்தை வீரா, திராவிட உதயா, மங்களம் வாசு, நாராயணன், பிரபா, அன்பு, ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.