புதுச்சேரி, ஜூன் 19: புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட ஐடிஐ சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அதில், புதுவையை சேர்ந்த மஞ்சுமணி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர். இதேபோல், வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்கோபுர வீதியில் உள்ள தனியார் மதுபான கடை அருகே மர்ம நபர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புதுவையை சேர்ந்த மைக்கேல் அகஸ்டின் (33), விஜய் (30) என்பது தெரியந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் 2 பிரிவுகளில் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.
மதுபோதை தகராறில் 3 பேர் கைது
0