திருச்சி, மே 29: திருச்சி ரங்கம் பஞ்சகரை சாலையில் இரண்டு வாலிபர்கள் மது போதையில் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த இருவர் மீது மோதிவிட்டு 20 அடி ஆழ கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது. இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி புள்ளம்பாடியைச் சேர்ந்தவா் பாலகிருஷ்ணன்(23). இவரது நண்பர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா. இருவரும் நேற்று மாலை ரங்கம் பஞ்சகரை கொள்ளிடம் மைதானத்தில் மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டினா். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திவாகர், ஜெயபிரகாஷ் ஆகிய இருவரையும் இடித்து தள்ளிவிட்டு, காா் 20 அடி ஆழ கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்த இருவரையும் மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த திவாகர், ஜெயபிரகாஷ் இருவரும் ரங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடததி வருகின்றனர்.
மதுபோதையால் விபரீதம்: தாறுமாறாக ஓடிய கார் கொள்ளிடத்தில் பாய்ந்தது
0