நித்திரவிளை, செப். 6: நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று காலை 10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெருவுமுக்கு பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்த முருகன் (68) என்பவரை மடக்கி பிடித்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 13 குவாட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.