பெ.நா.பாளையம், ஆக.14: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவில் தனியார் மதுபானக்கடை உள்ளது. நேற்று சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு அங்கு வேலை பார்க்கும் 3 ஊழியர்கள் மேல் அறையில் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது முன்தினம் விற்பனையான பணத்தில் ரூ.5 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. கடை ஊழியர் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.