விருத்தாசலம், ஆக. 5: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த முகுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் திருமலை(50) மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டம் அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் மகன் சக்திவேல்(42) ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த 5 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.