விருத்தாசலம், ஆக. 21: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாளிகைக்கோட்டம் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணாடம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் பாண்டியராஜன் (38) என்பவரை பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 34 குவார்ட்டர் மது பாட்டில்கள் மற்றும் ரூ.3500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ஸ்டாலின் என்பவரை தேடி வருகின்றனர்.