போடி, ஆக.14: போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ.க்கள் மணிகண்டன், கோதண்டராமன் ஆகியோர் தனித்தனியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி அருகே சில்லமரத்துப்பட்டி-தேவாரம் ரோட்டில் சென்றபோது, சில்ல மரத்துப்பட்டி சவுந்தரவேல் தெருவை சேர்ந்த முருகன்(56) என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல் போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் கண்காணி த்த போது கன்னிமார்கோயில் தெருவை சேர்ந்த பால்சாமி (72) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.