சேலம், மே 27: சேலம் பச்சப்பட்டி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் எஸ்ஐ புவனேஷ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பச்சப்பட்டி விளையாட்டு மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த அஞ்சலம் (55) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அஞ்சலத்தை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், கருப்பூர் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார், தட்டாச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் சிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (44) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து லட்சுமணனை கைது செய்து அவரிடம் இருந்த, ரூ.4500 மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.