மதுக்கரை, மே 31: கோவை தெற்கு மாவட்ட திமுகவில் மதுக்கரை ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, மதுக்கரை, கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் என உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக வீரப்பனூர் நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நந்தகுமார், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன், கருமத்தம்பட்டிக்கு சென்று, அங்குள்ள கலைஞரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் திமுக நிர்வாகிகள் உதயகுமார், சூலுர் கவுதமன், செண்பகராஜ், மெவுனு, நந்தகோபால், துரைசாமி, பிச்சனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், அருள்ராஜ், ஈஸ்வரன், துரைசாமி, செந்தில்குமார், சோமசுந்தரம், கொடி செந்தில், செல்லக்குட்டி,மருதாசலம், தர்மராஜ், இளைஞர் அணி விமல், மேத்யூ வேலுசாமி, காளிமுத்து, ரங்கநாதன், சுரேஷ், கனகாசலம், கனகராஜ், கண்ணப்பன், கோவிந்தசாமி, ரத்தினான், பெரியமுருகன், காளிமுத்து, முனியன், ரங்குலான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.