மதுக்கரை, ஜூன் 18: மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்காளக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதில், எட்டிமடை. க.க.சாவடி, நவக்கரை, மாவுத்தம்பதி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. தற்போது, இந்த பகுதியில் பருவமழை மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பருவமழையின் காரணமாக மழை அவ்வப்பொழுது மேகங்கள் உருவாகி மலைமுகடுகளில் தழுவி செல்கிறது. அந்த சமயங்களில் மழை மேகங்கள், சேலம்-கொச்சின் சாலை மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கைக்கு எட்டும் தூரத்தில் தவழ்ந்து செல்கிறது. மழை மேகங்கள் தொட்டு விடும் தூரத்தில் செல்வதை, வாகன ஓட்டிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.