ராமேஸ்வரம், ஜூலை 13: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நேற்று மாலை மதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக மாநில மீனவரணிச் செயலாளர் பேட்ரிக் தலைமை வகித்தார். நாட்டுப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் கோஷத்தை தொடர்ந்து மதிமுகவினர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட கழக செயலாளர் சுரேஷ், தணிக்கை குழு உறுப்பினர் குணா, சட்ட திட்டக்குழு உறுப்பினர் கராத்தே பழனிச்சாமி, மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.