திருவள்ளூர், ஆக. 15: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூரில் மாவட்ட மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நெமிலிச்சேரி மு.பாபு தலைமை தாங்கினார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஏ.அட்கோ மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.டி.மணி, மாவட்ட நிர்வாகிகள் பி.வி.தனஞ்செயன் க.விஜயராகவன், கே.எம்.வேலு, டி.ரவிக்குமார், சுஜாதா ஹேமசந்திரன், பா.கோவிந்தசாமி, கே.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜ அரசை கண்டித்து முழக்கமிட்டனர். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கி.தமிழ்வாணன், வைகோதாசன், பி.எஸ்.நடராஜன், சீனிவாசன், முருகன், சதீஷ்குமார், சங்கர், ஜி.வினோத்குமார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ரா.மணியரசு நன்றி கூறினார்.