திண்டுக்கல், ஜூலை 29: திண்டுக்கல்லில், மதிமுக மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பூப்பாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை வகித்து, ‘‘கட்சி வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்க வேண்டும். நகர, ஒன்றிய பகுதிகளில் இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டும்.
செப்.15ல் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.’’என்றார். இந்நிகழ்ச்சியில், மாநிலத் தீர்மான குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி, செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் சிவா, ராமகிருஷ்ணன், முத்துக்குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் மோகன், மாநகராட்சி கவுன்சிலர் காயத்ரி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் செல்வேந்திரன் நன்றி கூறினார்.