Xநாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.