பள்ளிபாளையம், மே 18: பள்ளிபாளையம் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், கோடை உழவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மண்ணின் தரத்தை அறிந்து அதற்கேற்ற சாகுபடி வேளாண்மை செய்தால், உரம் செலவு குறைந்து மகசூல் அதிகரிக்கும் என்பதால், களியனூர், சமயசங்கிலி உள்ளிட்ட கிராம பகுதியில் மண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. மண் பரிசோதனை செய்ய, தங்கள் பகுதி வேளாண்மை துணை அதிகாரிகளின் மூலமோ அல்லது பரிசோதனை கூடங்களில் நேரடியாகவோ செய்து கொள்ளலாம் என, பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி கேட்டு கொண்டுள்ளார். நேரடியாக செல்ல இயலாத விவசாயிகள், உழவன் செயலியின் தமிழ் மண் வளம் மூலம், சர்வே எண், உட்பிரிவு உள்ளிட்ட உள்ளீடுகளை அளித்து, தேவையான பரிந்துரைகளை பெற்று பயிரிட்டு பயன் பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மண் பரிசோதனை முகாம்
49
previous post