நல்லம்பள்ளி, ஆக.20: நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் தர்கா அருகே, இரவு நேரத்தில் மண் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கனிமவள உதவி இயக்குனர் சண்முகவள்ளி மற்றும் உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொங்குபட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் மகேந்திரன்(29) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண் கடத்திய 2 லாரி பறிமுதல்
previous post