நாகர்கோவில், ஆக.13: அகஸ்தீஸ்வரம் தாலுகா ராமபுரம் கிராமத்திற்கு உட்பட்ட குளத்திலிருந்து வண்டல் மண் எவ்வித அனுமதி சீட்டும் இல்லாமல் எடுக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இந்தநிலையில் தோவாளை தாலுகா சந்தைவிளை சந்திப்பில் வருவாய்துறையினர் வாகன சோதனை நடத்தியிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்துகொண்டிருந்த டெம்போ ஒன்றை நிறுத்தி நாகர்கோவில் ஆர்.டி.ஒ தமிழரசி சோதனை நடத்தினார். இந்த ஆய்வின் போது செங்கல்சூளை பயன்பாட்டிற்காக மண் கொண்டு செல்வதாக வாகனத்தில் இருந்தவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாகனம் கைப்பற்றப்பட்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.