குளச்சல், ஆக. 30 :மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடையின்போது 9 ம் நாள் இரவு பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கும்.இந்த பவனியை பெரிய சக்கர தீவெட்டி கமிட்டி நடத்துகிறது.இந்த கமிட்டியை நிர்வகிப்பதில் மண்டைக்காட்டில் இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்தது.இதனால் ஒரு தரப்பினர் அலுவலக கேட்டில் போடப்பட்ட பூட்டுக்கு மேல் தனியாக ஒரு பூட்டை போட்டனர்.இந்த மேல் பூட்டை மற்றொரு தரப்பினர் உடைத்தனர்.அப்போது காரவிளையை சேர்ந்த சிவகுமார் (42)என்பவர் செல்போனில் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது.போட்டோ எடுப்பதை தற்போதைய கமிட்டி தலைவர் முருகேசன் கண்டித்தார்.இதனால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரிடையே கைகலப்பு ஆனது.இதில் சிவகுமார் படுகாயமடைந்தார்.அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையே நடுவூர்க்கரை வரதராஜ்(65)மண்டைக்காடு நோக்கி நடந்து செல்லும்போது தீவெட்டி கமிட்டி தொடர்பாக சிவகுமார், சந்திரன்,ஸ்ரீராஜகுமார்(40),மாணிக்கராஜ்,விஜயன் (42)ஆகியோர் வழி மறித்து தடுத்து நிறுத்தி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.இதில் படுகாயமடைந்த வரதராஜ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் சிவகுமார்,முருகேசன் மற்றும் இரு தரப்பையும் சேர்ந்த கண்டால் தெரியும் நபர்கள் உள்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டைக்காடு பெரிய சக்கர தீவெட்டி கமிட்டி மோதலில் 35 பேர் மீது வழக்கு
previous post