குளச்சல், ஜூலை 5: மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் நாராயணவடிவு. இவரது மகள் சுனிதா (24). இவர் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் அருகே பெருவிளையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடமாக பணியாற்றி வருகிறார். கடந்த 2ம் தேதி வழக்கம்போல் சுனிதா வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் சுனிதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து சுனிதாவின் தாய் சுசீலா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுனிதாவை தேடி வருகிறார்கள்.
மண்டைக்காடு அருகே பட்டதாரி பெண் மாயம்
0