நாசரேத், அக். 20: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடந்த மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கால்பந்து போட்டி, திருச்செந்தூர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது. போட்டியில் 23 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. இதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தரையும் கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டினர்.
மண்டல கால்பந்து போட்டி நாசரேத் பொறியியல் கல்லூரி சாதனை
previous post