வில்லிபுத்தூர், ஆக.21: மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. 18 பள்ளிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகளும் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை தாளாளர் குருவலிங்கம், மேனேஜிங் டிரஸ்டி சித்ராமகேஸ்வரி, முதல்வர் கமலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.