தர்மபுரி, ஆக.28: தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஊராட்சி பூதநாயக்கன்பட்டி கிராமத்தில் சித்தி விநாயகர், மகா சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு 48ம் நாள் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. திரளான பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று(28ம் தேதி) மங்கள இசையுடன், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.